ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா

ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா

‘ஒரெழுத்து ஒருமொழி’ என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது. ‘ஒரெழுத்து ஒருமொழி’ அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை.  ஒரெழுத்து என்பதனாலேயே அடுத்து ஒற்று வராது. பூ   –  இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]       பூ + கடை =   பூக்கடை       பூ + பூத்தது      …

ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா Read More »

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது

குறுந்தொகை 153 : கபிலர்

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது தலைவி கூற்று குன்றக் கூகை குழறினு முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்கு லவர்வயிற்சார னீளிடைச் செலவா னாதே ~ மலை ஆந்தை கூவினாலோ அல்லது முற்றத்துப் பலாமரக் கிளையில் ஆண்குரங்கு தாவிப் பாய்ந்தாலோ சத்தம் கேட்டு அஞ்சிடும் என் நெஞ்சமானது, நள்ளிரவின் கடும் இருட்டில் அவர் செல்லும் நீண்ட மலைபாதையில் அவருடனே சென்றுவிட்டதே .. துணிந்து. kurunthogai 153 Kabilar நல்லதமிழ் : …

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது Read More »

நாலடியார் 21 : அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர்

நாலடியார் 21

நாலடியார் 21 மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில் ~ மலை உச்சியில் தெரியும் நிலவைப் போல் யானையின் தலை மீது விற்றிருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்த மன்னனும் இறுதியில் மண்ணிற்குள் தான் தூங்கினார் என்று சொல்லப்படுவார். அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை .. Naladiyar 21 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

உயிரளபெடை :  மழை வரும் பொழுது

உயிரளபெடை

உயிரளபெடை ஒர் எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவானது ‘அளவு / அளபு / மாத்திரை’ என்றழைக்கப்படுகின்றது The ‘unit of time taken’ to pronounce a letter / alphabet is called Alavu / Alabu [ Maathra ] . An unit roughly equals the time taken to wink your eyes or snap your fingers. உயிர்க்குறில்  [ அ , இ , உ …

உயிரளபெடை :  மழை வரும் பொழுது Read More »

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன்

குறுந்தொகை 128

குறுந்தொகை 128 : பரணர் குணகடற் றிரையது பறைதபு நாரைதிண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே ~ கிழக்குக் கடலின் அலைகள் மீது பறந்து வரும் வலிமையிழந்த வலசை நாரையானது, வலிமையான தேர்களை ஓட்டும் வல்லமை பெற்ற மாமன்னனின் தொண்டித் துறைமுகத்தருகே கலக்கின்ற ஆற்று நன்னீரில் வாழும் அயிரைமீன் கூட்டத்தைக் கண்டு ஆவென வாய்பிளந்து வருவதைப் போலக் கிடைப்பதற்கு அரியவளென்று தெரிந்தும் காதல் எனும் …

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன் Read More »

திருக்குறள் 1087 : கடாஅக் களிறு

திருக்குறள் 43

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் ~ திருக்குறள் 1087: போருக்கு முன் சினம்கொள்ளாமல் அமைதியாய் நின்றிருக்கும் யானை அணிந்துள்ள முகப்படாம் போலப் பெண்களின் கொங்கைகள் மீதான மேலாடை அச்சமூட்டுகிறது .. தகையணங்குறுத்தல்: தக்க அழகுடைப் பெண் கண்டு உள்ளம் நடுங்குதல் பால் : இன்பத்துப்பால் அதிகாரம் : தகையணங்குறுத்தல் நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 1087 – திருக்குறள் 1087

நாலடியார் 120 : கொண்டு செல்வது

நாலடியார் 120

நாலடியார் 120 தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் யாங்கணும் தேரின் பிறிதில்லை – ஆங்குதாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது ~ ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான். Naladiyar 120 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம்

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம்

தமிழ் இலக்கண இலக்கியம் மற்றும் சமய நூல்களில் புலமைமிக்கவராகவும் திருவாடுதுறை ஆதினத்தில் மாபெரும் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் ‘ திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ‘. இறையையும் தமிழையும் ஒன்றாகக் கருதி வாழ்ந்த தமிழறிஞர். தமிழ்ப்பற்று மிக்க மாணவர்களுக்கு நல்லாசிரியராகத் திகழ்ந்தவர். சாதிமத வேறுபாடின்றி மாணாக்கருக்குத் தமிழ்க்கல்வி அளித்ததோடு மட்டுமல்லாது உணவும் இடவசதியும் அளித்துவந்தார். இவரது மாணாக்கரில் ஒருவர்தாம் ‘ உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சுவாமிநாதர் ‘ என்கின்ற ‘ உ.வே.சா ‘. பின்னாட்களில் ‘ …

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம் Read More »

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள்

குற்றியலுகரம் கள் விகுதி

குற்றியலுகரம் கள் விகுதி குற்றியலுகர அடிப்படை விதி : வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வரும். ஆனால், எழுத்து +  கள் = எழுத்துகள்  [ ஒற்று வரவில்லை ] … ஏன் ? ‘கொக்கு’ -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘விளக்கு’ -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘வாத்து’ -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.‘பாட்டு’   -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.‘தட்டு’    -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.  என்றே எழுதுகின்றோம். * அதைப்போலவே ‘வாழ்த்துகள்’ …

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள் Read More »

திருக்குறள் 43 : தென்புலத்தார் தெய்வம்

திருக்குறள் 43

திருக்குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை .. ~ தென்னாட்டவருக்குக் கடவுள் என்பது விருந்தினரைப் போற்றி வரவேற்கும் இல்வாழ்க்கையே ஆகும். அது ஐம்புலன்களையும் அடக்கித் துறவறம் கொண்டு கடவுளை அடைவதை விடவும் தலையானது .. பால் : அறத்துப்பால் அதிகாரம் : இல்வாழ்க்கை நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 43

error:
Scroll to Top