குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது

குறுந்தொகை 153 : கபிலர்

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது தலைவி கூற்று குன்றக் கூகை குழறினு முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்கு லவர்வயிற்சார னீளிடைச் செலவா னாதே ~ மலை ஆந்தை கூவினாலோ அல்லது முற்றத்துப் பலாமரக் கிளையில் ஆண்குரங்கு தாவிப் பாய்ந்தாலோ சத்தம் கேட்டு அஞ்சிடும் என் நெஞ்சமானது, நள்ளிரவின் கடும் இருட்டில் அவர் செல்லும் நீண்ட மலைபாதையில் அவருடனே சென்றுவிட்டதே .. துணிந்து. kurunthogai 153 Kabilar நல்லதமிழ் : …

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது Read More »

நாலடியார் 21 : அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர்

நாலடியார் 21

நாலடியார் 21 மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில் ~ மலை உச்சியில் தெரியும் நிலவைப் போல் யானையின் தலை மீது விற்றிருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்த மன்னனும் இறுதியில் மண்ணிற்குள் தான் தூங்கினார் என்று சொல்லப்படுவார். அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை .. Naladiyar 21 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன்

குறுந்தொகை 128

குறுந்தொகை 128 : பரணர் குணகடற் றிரையது பறைதபு நாரைதிண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே ~ கிழக்குக் கடலின் அலைகள் மீது பறந்து வரும் வலிமையிழந்த வலசை நாரையானது, வலிமையான தேர்களை ஓட்டும் வல்லமை பெற்ற மாமன்னனின் தொண்டித் துறைமுகத்தருகே கலக்கின்ற ஆற்று நன்னீரில் வாழும் அயிரைமீன் கூட்டத்தைக் கண்டு ஆவென வாய்பிளந்து வருவதைப் போலக் கிடைப்பதற்கு அரியவளென்று தெரிந்தும் காதல் எனும் …

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன் Read More »

திருக்குறள் 1087 : கடாஅக் களிறு

திருக்குறள் 43

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் ~ திருக்குறள் 1087: போருக்கு முன் சினம்கொள்ளாமல் அமைதியாய் நின்றிருக்கும் யானை அணிந்துள்ள முகப்படாம் போலப் பெண்களின் கொங்கைகள் மீதான மேலாடை அச்சமூட்டுகிறது .. தகையணங்குறுத்தல்: தக்க அழகுடைப் பெண் கண்டு உள்ளம் நடுங்குதல் பால் : இன்பத்துப்பால் அதிகாரம் : தகையணங்குறுத்தல் நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 1087 – திருக்குறள் 1087

நாலடியார் 120 : கொண்டு செல்வது

நாலடியார் 120

நாலடியார் 120 தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் யாங்கணும் தேரின் பிறிதில்லை – ஆங்குதாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது ~ ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான். Naladiyar 120 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

திருக்குறள் 43 : தென்புலத்தார் தெய்வம்

திருக்குறள் 43

திருக்குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை .. ~ தென்னாட்டவருக்குக் கடவுள் என்பது விருந்தினரைப் போற்றி வரவேற்கும் இல்வாழ்க்கையே ஆகும். அது ஐம்புலன்களையும் அடக்கித் துறவறம் கொண்டு கடவுளை அடைவதை விடவும் தலையானது .. பால் : அறத்துப்பால் அதிகாரம் : இல்வாழ்க்கை நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 43

நாலடியார் 71 : யாரிடம் சொல்லக்கூடாது

நாலடியார் 71

நாலடியார் 71 கோதை அருவிக் குளிர்வரை நன்னாட … பேதையோ டியாதும் உரையற்க – பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. ~ பூமாலை போலக் கொட்டும் அருவியின் காரணமாகக் குளிர்கின்ற மலைகளை உடைய மன்னா … முட்டாளோடு எதையும் சொல்லிவிடாதே .. எதைச் சொன்னாலும் முட்டாள் அதை வெளியில் மாற்றிச் சொல்லிவிடுவான் .. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே அதனினும் நன்று. நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Naaladiyar 71

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும்

kurunthogai 167

குறுந்தொகை 167 : கூடலூர்க் கிழார் முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே ~ புளித்த தயிரைப் பிசைந்த பொழுது காந்தள் மலர் போன்ற உன் மகளின் மெல்லிய விரல்கள் கலிங்க நாட்டின் கழுவாத கழுமரங்களைப் போல இருந்தன. குவளை மலர்களைப் போன்ற அவள் கண்கள் அடுப்புப்புகை பட்டு வருந்துகையிலும் …

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும் Read More »

திருக்குறள் 398 : கல்வியின் பயன்

thirukkural 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து திருக்குறள் 398 திருக்குறள் 398 பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு பிறவிகளிலும் உயர்வு தரும். கல்வியின் பயன் குறித்துத் தொடர்ந்து பேசுவது தமிழ்ச்சான்றோர் பணி. கல்வி எவ்வாறு ஒருவருக்குத் துணை நிற்கும் என்று விளக்கும் மிக முக்கியமான இக்குறளில், கல்வியின் அருமையை மிக எளிமையாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர். இங்கு ஏழு பிறவியென்பது இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்வர் அறிஞர் …

திருக்குறள் 398 : கல்வியின் பயன் Read More »

Scroll to Top