நாலடியார் 21 : அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர்

நாலடியார் 21

நாலடியார் 21 மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில் ~ மலை உச்சியில் தெரியும் நிலவைப் போல் யானையின் தலை மீது விற்றிருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்த மன்னனும் இறுதியில் மண்ணிற்குள் தான் தூங்கினார் என்று சொல்லப்படுவார். அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை .. Naladiyar 21 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

நாலடியார் 120 : கொண்டு செல்வது

நாலடியார் 120

நாலடியார் 120 தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் யாங்கணும் தேரின் பிறிதில்லை – ஆங்குதாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது ~ ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான். Naladiyar 120 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

நாலடியார் 71 : யாரிடம் சொல்லக்கூடாது

நாலடியார் 71

நாலடியார் 71 கோதை அருவிக் குளிர்வரை நன்னாட … பேதையோ டியாதும் உரையற்க – பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. ~ பூமாலை போலக் கொட்டும் அருவியின் காரணமாகக் குளிர்கின்ற மலைகளை உடைய மன்னா … முட்டாளோடு எதையும் சொல்லிவிடாதே .. எதைச் சொன்னாலும் முட்டாள் அதை வெளியில் மாற்றிச் சொல்லிவிடுவான் .. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே அதனினும் நன்று. நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Naaladiyar 71

Scroll to Top