நாலடியார் 120 : கொண்டு செல்வது

நாலடியார் 120

தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் 
யாங்கணும் தேரின் பிறிதில்லை – ஆங்குதாம் 
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே 
கூற்றம்கொண் டோடும் பொழுது

~ ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.

Naladiyar 120

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

Scroll to Top