திருக்குறள் 398 : கல்வியின் பயன்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

திருக்குறள் 398

திருக்குறள் 398 பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு பிறவிகளிலும் உயர்வு தரும்.

கல்வியின் பயன் குறித்துத் தொடர்ந்து பேசுவது தமிழ்ச்சான்றோர் பணி. கல்வி எவ்வாறு ஒருவருக்குத் துணை நிற்கும் என்று விளக்கும் மிக முக்கியமான இக்குறளில், கல்வியின் அருமையை மிக எளிமையாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர். இங்கு ஏழு பிறவியென்பது இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்வர் அறிஞர் பெருமக்கள்.

மேலும் தமிழர் வாழ்வியலில் ஆண் / பெண் என இருபாலருக்கும் ஏழு பருவங்களை வயதின் அடிப்படையில் பிரிப்பர். பாலகன் முதல் மூப்பன் வரையிலான ஏழு பருவங்களில் உங்கள் இளைய பருவத்தில் நீங்கள் கற்கும் கல்வியானது உங்கள் இறுதிப் பருவம் வரைத் துணை நிற்கும் என்றும் கொள்ளலாம்.

children, india, education-876543.jpg

சமூதாயத்தில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றுவது கல்வியே .. இளமையில் பதியும் கருத்தினைத்தான் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடனும் பின்பற்றுவார்கள். ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி அங்குள்ள கல்வி முறையே .. இளமையில் கற்றிடும் கல்வியானது எக்காலத்திலும் துணை நிற்கும் .. முதுமையிலும் துணை நிற்கும் ..

கல்வி என்பது அறிவியல் , கணிதம் மட்டுமல்ல .. மனிதம் சார்ந்ததும் தான் .. மற்ற உயிர்களிடத்தில் அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டுவது கல்வியே. நல்லது எது தீயது எது என்று பகுத்தறியும் அறிவினைத் தருவது கல்வி. கற்றல் என்பது இளமையோடும் நின்றுவிடுவதில்லை. அதுவொரு தொடர்முயற்சி. வாழ்நாளெல்லாம் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு உண்டு இந்த வையத்தில். வள்ளுவர் சொல் கேட்டுக் கல்வியின் பாற் நின்று பயன் பெறுவோம் ..

எவ்வளவு கற்கின்றோம் என்பதை விட எதைக் கற்கின்றோம் என்பதும் கற்றவற்றின் வழியில் நிற்கின்றோமா என்பதுமே தமிழர் நெறி 

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

திருக்குறள் 398 Thirukkural 398

Scroll to Top