நாலடியார் 120 : கொண்டு செல்வது

நாலடியார் 120

நாலடியார் 120 தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் யாங்கணும் தேரின் பிறிதில்லை – ஆங்குதாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது ~ ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான். Naladiyar 120 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம்

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம்

தமிழ் இலக்கண இலக்கியம் மற்றும் சமய நூல்களில் புலமைமிக்கவராகவும் திருவாடுதுறை ஆதினத்தில் மாபெரும் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் ‘ திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ‘. இறையையும் தமிழையும் ஒன்றாகக் கருதி வாழ்ந்த தமிழறிஞர். தமிழ்ப்பற்று மிக்க மாணவர்களுக்கு நல்லாசிரியராகத் திகழ்ந்தவர். சாதிமத வேறுபாடின்றி மாணாக்கருக்குத் தமிழ்க்கல்வி அளித்ததோடு மட்டுமல்லாது உணவும் இடவசதியும் அளித்துவந்தார். இவரது மாணாக்கரில் ஒருவர்தாம் ‘ உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சுவாமிநாதர் ‘ என்கின்ற ‘ உ.வே.சா ‘. பின்னாட்களில் ‘ …

தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம் Read More »

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள்

குற்றியலுகரம் கள் விகுதி

குற்றியலுகரம் கள் விகுதி குற்றியலுகர அடிப்படை விதி : வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வரும். ஆனால், எழுத்து +  கள் = எழுத்துகள்  [ ஒற்று வரவில்லை ] … ஏன் ? ‘கொக்கு’ -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘விளக்கு’ -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘வாத்து’ -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.‘பாட்டு’   -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.‘தட்டு’    -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.  என்றே எழுதுகின்றோம். * அதைப்போலவே ‘வாழ்த்துகள்’ …

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள் Read More »

திருக்குறள் 43 : தென்புலத்தார் தெய்வம்

திருக்குறள் 43

திருக்குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை .. ~ தென்னாட்டவருக்குக் கடவுள் என்பது விருந்தினரைப் போற்றி வரவேற்கும் இல்வாழ்க்கையே ஆகும். அது ஐம்புலன்களையும் அடக்கித் துறவறம் கொண்டு கடவுளை அடைவதை விடவும் தலையானது .. பால் : அறத்துப்பால் அதிகாரம் : இல்வாழ்க்கை நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 43

நாலடியார் 71 : யாரிடம் சொல்லக்கூடாது

நாலடியார் 71

நாலடியார் 71 கோதை அருவிக் குளிர்வரை நன்னாட … பேதையோ டியாதும் உரையற்க – பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. ~ பூமாலை போலக் கொட்டும் அருவியின் காரணமாகக் குளிர்கின்ற மலைகளை உடைய மன்னா … முட்டாளோடு எதையும் சொல்லிவிடாதே .. எதைச் சொன்னாலும் முட்டாள் அதை வெளியில் மாற்றிச் சொல்லிவிடுவான் .. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே அதனினும் நன்று. நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Naaladiyar 71

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும்

kurunthogai 167

குறுந்தொகை 167 : கூடலூர்க் கிழார் முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே ~ புளித்த தயிரைப் பிசைந்த பொழுது காந்தள் மலர் போன்ற உன் மகளின் மெல்லிய விரல்கள் கலிங்க நாட்டின் கழுவாத கழுமரங்களைப் போல இருந்தன. குவளை மலர்களைப் போன்ற அவள் கண்கள் அடுப்புப்புகை பட்டு வருந்துகையிலும் …

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும் Read More »

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை ..

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றிமலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய்விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனாநிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே. தமிழ் இலக்கணத்தில் மெய் எழுத்துக்கு அரை மாத்திரை. அந்த அளவுக்குக் கூட மாத்திரை கிடைக்காமல் வயிற்றுப் போக்கால் [காலரா] பலர் இறந்து போயுள்ளனர். மனித மனதில் தோன்றும் மூன்று விதமான நோய்களை நீக்கும்  வல்லமை படைத்த தூய்மையானவரே , இந்நிலத்தில் மக்களுக்காக இருக்கும் சுப்ரமணியரே , பெருகும் இந்நோய் …

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை .. Read More »

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம்

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை 🙂 தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார் [ 1871 – 1931 ] , பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து “ஆய்த எழுத்தை” மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார். முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம். பயிற்சி 1: பயிற்சி 2: தமிழ் …

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம் Read More »

Scroll to Top