குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது

குன்றக் கூகை குழறினு முன்றிற் 
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் 
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே 
ஆரிருட் கங்கு லவர்வயிற்
சார னீளிடைச் செலவா னாதே

~ மலை ஆந்தை கூவினாலோ அல்லது முற்றத்துப் பலாமரக் கிளையில் ஆண்குரங்கு தாவிப் பாய்ந்தாலோ சத்தம் கேட்டு அஞ்சிடும் என் நெஞ்சமானது, நள்ளிரவின் கடும் இருட்டில் அவர் செல்லும் நீண்ட மலைபாதையில் அவருடனே சென்றுவிட்டதே .. துணிந்து.

kurunthogai 153 Kabilar

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

error:
Scroll to Top