நாலடியார் 71 : யாரிடம் சொல்லக்கூடாது

நாலடியார் 71

கோதை அருவிக் குளிர்வரை நன்னாட … 
பேதையோ டியாதும் உரையற்க – பேதை 
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் 
வழுக்கிக் கழிதலே நன்று.

~ பூமாலை போலக் கொட்டும் அருவியின் காரணமாகக் குளிர்கின்ற மலைகளை உடைய மன்னா … முட்டாளோடு எதையும் சொல்லிவிடாதே .. எதைச் சொன்னாலும் முட்டாள் அதை வெளியில் மாற்றிச் சொல்லிவிடுவான் .. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே அதனினும் நன்று.

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Naaladiyar 71

error:
Scroll to Top