நாலடியார் 21 : அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர்
நாலடியார் 21 மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில் ~ மலை உச்சியில் தெரியும் நிலவைப் போல் யானையின் தலை மீது விற்றிருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்த மன்னனும் இறுதியில் மண்ணிற்குள் தான் தூங்கினார் என்று சொல்லப்படுவார். அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை .. Naladiyar 21 நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.