குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள்

குற்றியலுகர அடிப்படை விதி : வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வரும்.

ஆனால்,

எழுத்து +  கள் = எழுத்துகள்  [ ஒற்று வரவில்லை ] … ஏன் ?

‘கொக்கு’ -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
‘விளக்கு’ -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
‘வாத்து’ -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.
‘பாட்டு’   -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.
‘தட்டு’    -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.  என்றே எழுதுகின்றோம்.

* அதைப்போலவே ‘வாழ்த்துகள்’ என்பதே சரி.  இருப்பினும் குற்றியலுகர விதிகளைக் கொண்டு ‘வாழ்த்துக்கள்’ என்று எழுதுவர். மரபு/வழக்கு என்ற அடிப்படையில் இதை ஏற்போரும் உண்டு.

1. ஒற்று வரும் இடங்கள்

*  நெடில் ஓசை அடுத்து ஒற்று வரும் . ஒரே அலங்கடை (exception) ‘ ஐ ‘

   விழாக்கள்,  ஈக்கள் ,  பூக்கள் ,  கைகள்* ,  யானைகள்*

* முற்றியலுகரம் அடுத்து ஒற்று வரும்

   குழுக்கள் ,  கொசுக்கள் , 

* சில வடமொழிச் சொற்கள் –  பந்துக்கள்  vs  பந்துகள்

 ‘பந்தம் bandham / bandhu’என்ற வடமொழிச் சொல்லை ‘பந்துக்கள்’ என்று பன்மையில்  எழுதுவர். பந்துகள் என்று குற்றியலுகர வகைமையில் தான் எழுத வேண்டும், இருப்பினும் ஏற்கனவே ‘பந்து’ ball என்ற சொல் வழக்கில் இருப்பதால் இவ்வாறு சிலவிடங்களில் அலங்கடையுடன் வரும். 

‘வு’கரம் சிலவிடங்களில் குற்றியலுகரமாகவும் சிலவிடங்களில் முற்றியலுகரமாகவும் வரும்

* ‘வு’ என்ற எழுத்தைக் குற்றியலுகரமாக உச்சரிப்பதில்/எழுதுவதில் உள்ள பயன் ,  ‘இரவுகள் , நிலவுகள்’ என்று எழுதுவதைப் பொதுமைப்படுத்த எளிமையாக இருக்கும்.

ஒற்று வராத இடங்கள்

* குற்றியலுகர நிலைமொழிச் சொல்லின் அடுத்துக் ‘கள்’  விகுதி வந்தால்,  இடையில்  ‘ஒற்று’ வராது. (  பன்மை விகுதியாக 😊 )

   ஆடுகள் ,  படகுகள் ,  சிறகுகள்,  மருந்துகள் ,  இயல்புகள் , இரவுகள்* , ஆண்டுகள்*

* மெய்யெழுத்து இறுதி அடுத்து ஒற்று வராது

   கண்கள் ,  கால்கள்

* குறில் அடுத்து ஒற்று வராது

   விழிகள் ,  வழிகள் ,  எலிகள்

* சில இயற்கைப் பொருட்களுக்கு மரபாகவே பன்மை இல்லை.

நீர்கள், காற்றுகள், வான்கள், திக்குகள் (திசை) என்று பன்மை இல்லை. இவை ஒருமையில் தான் வரும்.

**) அதைப் போலவே ‘ஆண்டுத்திட்டம்’ , ‘ஆண்டுக் கொண்டிருந்தான்’ என்று எழுதும் வழக்கு இருந்தது. ஆனால் குற்றியலுகர விதியின்படி ‘ஆண்டு திட்டம்’ ‘ஆண்டுகொண்டிருந்தான்’ என்று எழுதினால் ‘ஆண்டுகள்’ என்று எழுதும்பொழுது நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

**) * நாட்கள் Vs நாள்கள் ?

புணர்ச்சி விதிகள் ‘பன்மை’ விகுதிக்குப் பொருந்துமா ? நாட்கள் என்று எழுதுவது தவறு, ‘நாள்கள்’ என்று எழுதுவதே சரி என்பர் சிலர் . அப்போது ‘சொற்கள் ,கற்கள் ,பற்கள் ,ஆட்கள் ,நாட்கள் ,வாட்கள்’ – என்று எழுதுகின்றோமே ..

இப்படி எழுதும் மரபு இருப்பதால் .. இதைத் தொடர்வதே சரியாகும். ‘நாள்கள்’ என்றுதான் எழுதவேண்டும் என்று மரபோ விதியோ இலக்கணத்தில் இல்லை.

இறுதியாக

இப்போது நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள் ..

வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா அல்லது வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா ?

ஒற்று வருமா வராதா? கண்டுபிடிக்கவும். உங்களுக்கு நல்லதமிழின் வாழ்த்துகள்.

Kutriyalugaram குற்றியலுகரம் மற்றும் கள் விகுதி

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

error:
Scroll to Top