உயிரளபெடை :  மழை வரும் பொழுது

உயிரளபெடை

ஒர் எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவானது ‘அளவு / அளபு / மாத்திரை’ என்றழைக்கப்படுகின்றது

The ‘unit of time taken’ to pronounce a letter / alphabet is called Alavu / Alabu [ Maathra ] . An unit roughly equals the time taken to wink your eyes or snap your fingers.

உயிர்க்குறில்  [ அ , இ , உ , எ, ஒ   ]   –  1  மாத்திரை     short vowels

உயிர்நெடில்   [ ஆ , ஈ , ஊ , ஏ, ஓ , ஐ]   –  2 மாத்திரை     long vowels

மெய்         [  க் , ங் , ச்   ….       ]   –  1/2  மாத்திரை  consonants

உயிர்மெய்க்குறில் [ க , ங , ச …..   ]   –  1 மாத்திரை     short consonantal vowel

உயிர்மெய்நெடில்  [ கா , கீ ,  சா ….. ]   –  2 மாத்திரை     long consonantal vowel

தமிழ் மொழியில் எந்த எழுத்தும் இரண்டு மாத்திரை அளவைத் தாண்டி ஒலிக்காது. ஆனால் ……

செய்யுள் / பாடல் [ poem] வழக்கில் இசை [ musical filler ] / அசை [ grammatical filler ] வேண்டி , இரண்டு மாத்திரை அளவையும் தாண்டி எழுத்துகள் ஒலிக்கும். பேச்சு வழக்கில் அல்ல , செய்யுள் வழக்கில். எப்படி ?

சில பாடல்களை எடுத்துக்கொள்வோம் ,

1.   ‘ கண்ணா உனைத் தேடுகின்றேன் நான் ‘ –   ஆனால் பாடலாகப் பாடும்பொழுது இசையை நிரப்பி ‘ கண்ணாஅஅஅ உனைத் தேடுகின்றேன் நான் ‘ – என்று புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப உயிர் எழுத்தை நீட்டித்து அளபெடுத்துப் பாட முடியும்.

2.   ‘ எங்கிருந்தாலும் வாழ்க’ ->   ‘ எங்கிருந்தாலும் வாஅழ்க ‘ ->   ‘ எங்கிருந்தாலும் வாஅஅழ்க ‘

உயிரளபெடை  =   ‘ உயிர் +  அளபு +  எடை ‘  கூடும் இடங்கள்.

விதிகள்:

*  எழுத்துகளில் ‘ நெடில் எழுத்து ‘ அடுத்து மட்டுமே அளபு கூடும்

*   அவ்வெழுத்தின் ‘ இன உயிர்க்குறில் ‘ அளபெடுத்து வரும்.

எ.க   ஆ என்ற ஓசையை அடுத்து ‘அ’ என்ற இன உயிர்க்குறில் அளபெடுக்கும் : (நிலாவே வா) நிலாஅஅஅவே வாஅஅஅஅ

சரி, மழைக்கும் அளபெடைக்கும் என்ன சம்பந்தம் ?

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

~ உண்பவரின் உணவை முழுமையாக்கும் உப்பாகி, உண்ட பின்னர்த் தாகம் தீர்த்திடும் நீருமாகிடவே பொழிகின்றது மழை ..

– இத்திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன. திருக்குறளின் சிறப்பே அதனுள் பல உருவகங்கள் வருவதே. ஒவ்வொரு உரையாசிரியரும் அவரவருக்குப் பட்ட பொருளை விளக்குவர். அளபெடையை மனதில் கொண்டு பார்த்தால் இங்கு மேலும் ‘ஒரு’ பொருள் கிடைக்கின்றது. 

முதல் வரியில்: “துப்பாய துப்பாக்கித்” என்று வருகின்றது. வினையெச்சம் என்றால் “துப்பாயத் துப்பாக்கித்” என்றுதான் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. எனவே இதனைத் “துப்பாயது உப்பாக்கி” என்று பொருள் கொள்ளவேண்டும்.

இரண்டாம் வரியில்: “துப்பாய தூஉம் மழை” என்று வருகின்றது. இங்கும் வினையெச்சம் என்றால் “துப்பாயத் தூஉம் மழை” என்றுதான் வந்திருக்கவேண்டும். வரவில்லை. எனவே “துப்பாய தூவும் மழை” என்று வாசிக்கக்கூடாது. “துப்பாயதும் மழை” என்று பொருள் கொள்ளவேண்டும்.

பின்னர் ஏன் வள்ளுவர் “துப்பாய தும் மழை” என்று எழுதவில்லை. “தும்” என்பது ஓரசைச் சீர். வெண்பாவில் தளை தட்டும். ஓரசைச் சீர் குறளின் ஈற்றில் மட்டுமே வரமுடியும். “தும்” என்பதனை இழுத்து “தூஉம்” என்று எழுதினால் தளை தட்டாது. “தூவும்” என்று சொல்லாமல், “துப்பாயதூ(உ)ம் மழை” என்று “உ”கர ஓசையைச் சற்று இழுத்து உச்சரிக்கவேண்டும்.

இங்கு “ஊ” என்ற ஓசையை அடுத்து “உ” சேர்ந்து மூன்று மாத்திரை அளபு ஒலிக்கிறது. உயிர் எழுத்து அளபெடுப்பதால் “உயிரளபெடை“.

சரி, மழைக்கும் அளபெடைக்கும் என்ன சம்பந்தம். ஒன்றும் இல்லை 🙂

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 43 – திருக்குறள் 43 – Uyiralabedai

error:
Scroll to Top