‘ஒரெழுத்து ஒருமொழி’ என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது.
‘ஒரெழுத்து ஒருமொழி’ அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை.
ஒரெழுத்து என்பதனாலேயே அடுத்து ஒற்று வராது.
பூ – இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]
பூ + கடை = பூக்கடை
பூ + பூத்தது = பூப்பூத்தது
தை – இதை அடுத்து ?
தை + பொங்கல் = தைப்பொங்கல்
தை + பிறந்தது = தை பிறந்தது [ ஒற்று வரவில்லை. ஏன் ?]
சில இடங்களில் ‘ ஒற்று ‘ப் போட்டு எழுதினால் ஒரு பொருளும் (meaning), ஒற்றுப் போடாமல் எழுதினால் வேறொரு பொருளும் வரும். சில சொற்களுக்கு அலங்கடைகளும் (exceptions) உண்டு.
ஆகவே ,
எழுத்துப் புணரியல் , வேற்றுமை , குற்றியலுகரம் , முற்றியலுகரம் , அலங்கடைகள் , குறுக்கம் , அல்வழித் தொகைச்சொல் , உரிச்சொல் , மரபு மற்றும் வழக்குத் தெரிந்தால் மட்டுமே “ஒற்று”ப் போட்டு எழுதுவதா வேண்டாமா என்று தெரியும்.
இவையெல்லாம் JUST CONCEPTS. அவ்வளவுதான். விதிகளாக அணுகி இலக்கணம் கற்பதைவிட ஒரு கருதுகோள்( CONCEPT / IDEA ) ஆக அணுகினால் மிக மிக எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.
oreluthu orumozhi : தமிழ் இலக்கணம்
நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.