குறுந்தொகை 167 : கூடலூர்க் கிழார்
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே
~ புளித்த தயிரைப் பிசைந்த பொழுது காந்தள் மலர் போன்ற உன் மகளின் மெல்லிய விரல்கள் கலிங்க நாட்டின் கழுவாத கழுமரங்களைப் போல இருந்தன. குவளை மலர்களைப் போன்ற அவள் கண்கள் அடுப்புப்புகை பட்டு வருந்துகையிலும் தயிர் கலந்து அவள் செய்த புளிப்பு மிக்க ‘பாகற்காய்க்’ குழம்பை இனிதெனக் கணவன் உண்ண, நுட்பமாக மகிழ்ந்ததல்லவா ஒளிரும் நெற்றியினை உடைய மகளின் முகமே — செவிலித்தாய் கூற்று.
மகள் திருமணமாகிச் சென்றுவிட்டாள். காதல் திருமணம் அல்லது வேறேதும் காரணமாகவோ தாயிற்கும் மகளுக்கும் சிறு பிணக்கு. புகுந்த வீட்டில் மகள் எவ்வாறு உள்ளாள் என்பதை அறியத் தாயின் உள்ளம் தவிக்கிறது. தன் தோழியும் தன் மகளிற்குச் சிறுவயது முதலே செவிலித்தாயாகவும் இருந்தவளைப் பார்த்துவரச் சொல்கின்றாள். பார்த்துவிட்டுத் திரும்பி வந்த செவிலித்தாயானவள் மகள் குடும்பம் நடத்தும் அழகைத் தன் தோழியாகிய தாயிடம் கூறுகின்றாள் ..
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதான இந்தக் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடும் நகரம் ‘கலிங்கம்’. தற்கால ‘ஒடிசா’. மௌரிய பேரரசின் வழி வந்த ‘அசோகர்’ கி.மு. 261ல் கலிங்கம் மீது தொடுத்த கொடும் போரைக் குறிக்கின்றது இப்பாடல். இதன் பின்னரே அசோகர் மனம் வருந்திப் பௌத்த மதத்தைத் தழுவியதாக வரலாறு சொல்கின்றது.
நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Kurunthogai 167