குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது
குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது தலைவி கூற்று குன்றக் கூகை குழறினு முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்கு லவர்வயிற்சார னீளிடைச் செலவா னாதே ~ மலை ஆந்தை கூவினாலோ அல்லது முற்றத்துப் பலாமரக் கிளையில் ஆண்குரங்கு தாவிப் பாய்ந்தாலோ சத்தம் கேட்டு அஞ்சிடும் என் நெஞ்சமானது, நள்ளிரவின் கடும் இருட்டில் அவர் செல்லும் நீண்ட மலைபாதையில் அவருடனே சென்றுவிட்டதே .. துணிந்து. kurunthogai 153 Kabilar நல்லதமிழ் : …