ஆய்த எழுத்து என்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை 🙂
- ஆய்த எழுத்தென்பது “முப்பாற்புள்ளிகள்” ( 3 droplets ).
- ஆயுதமாகிய ” கேடயம் ” ( armour) போலிருப்பதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம்.
- அல்லது “ஆய்தலாகிய” பிரித்தல் தொழிலைச் செய்வதால் “ஆய்ந்த” எழுத்து என அழைக்கப்பட்டிருக்கலாம்.
- ஆங்கிலத்தில் a[h] என்பதை உச்சரிப்பதைப் போல உச்சரிக்க வேண்டும்.
- இவ்வெழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலஅளவு “1/2” மாத்திரை.
- சொற்களில் இது மேலும் குறைந்து “1/4” மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு ஆய்தம் குறைந்து ஒலிப்பதை “ஆய்தக்குறுக்கம்” என்பர்.
- ஆய்த எழுத்தை அடுத்து ” வல்லெழுத்து ” ( க் , ச் , ட் , த் , ப் , ற் ) சார்ந்த உயிர்மெய் எழுத்துகளே வரும்.
- ஆய்த எழுத்தின் முன்னர் குறில் தான் வரும். [ பண்டைய இலக்கண வழக்கு ]
தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார் [ 1871 – 1931 ] , பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து “ஆய்த எழுத்தை” மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார்.
முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம்.
பயிற்சி 1:
1. பல்துளி + ஆறு => பல துளிகளால் ஆன ஆறு
2. ப + ல் + துளி + ஆறு
3. ப + ற் + துளி + ஆறு
புணரியலில்
‘ல்’ ->’ற்’ ஆக மாறும்
எ.க. கல் + சிலை => கற்சிலை
4. ப + ற் + த்உ + ளி + ஆறு
ப + ற் + உ + ளி + ஆறு
புணரியலில் 'ற'கரம் அடுத்து வரும்
'த'கரம் கெடும்
5. ப + _ + ற்உ + ளி + ஆறு
'ற'கரம் தன்னிடத்தில் இருந்து பிரிந்துசென்று
'உ'கரத்தொடு சேரும். இந்தப் பிரித்தலை(ஆய்தலை)
நிகழ்த்த ஆய்தம் தோன்றும்
6. ப + ஃ + று + ளி + ஆறு
7. பஃறுளி ஆறு [ pahruli ]
பயிற்சி 2:
1. உயர்திணை – கடவுள் மனிதர் நரகர்
அல்திணை – மற்ற உயிருள் /உயிரல் (உயிர் அல்லாத)
2. அல்திணை – அல் + திணை
– அல் + + தி + ணை
– அ + ல் + த்இ + ணை
– அ + ற் + த்இ + ணை
– அ + ற் + _இ + ணை
– அ + _ + ற்இ + ணை
– அ + ஃ + றி + ணை
– அஃறிணை
தமிழ் மொழியில் F என்ற ஓசை இல்லை.
FAST – பாஸ்ட்
COFFEE – காபி என்றே எழுதி வந்தனர்.
‘F’ போன்ற வேறு மொழி எழுத்துகளைத் தமிழ்ப்படுத்தத் தமிழறிஞர் திரு. பா.வே. மாணிக்கனார் ‘ஆய்த’ எழுத்தைப் பயன்படுத்தலாம் என வழி செய்தார்
FAST – பாஸ்ட் – ஃபாஸ்ட்
COFFEE – காபி – காஃபி
ஆய்த எழுத்து எடுத்துக்காட்டு
நீலகிரி மாவட்டம் ” பர்லியார் “
கன்னியாக்குமரி மாவட்டம் ” பரளியார் “
ஆய்தல் – ஆய்ஞ்சு : வட்டார வழக்கு
சங்கப் பாடல்களில் ‘ பஃறுளி ஆறு ‘
Tamil Scholar Engineer P.V.Manickam
நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil