ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா

ஒரெழுத்து என்பதனாலேயே அடுத்து ஒற்று வராது.

பூ   –  இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]

      பூ + கடை =   பூக்கடை

      பூ + பூத்தது      =   பூப்பூத்தது

தை  –  இதை அடுத்து ?

      தை + பொங்கல் =  தைப்பொங்கல்

      தை + பிறந்தது   =  தை பிறந்தது   [ ஒற்று வரவில்லை. ஏன் ?]

சில இடங்களில் ‘ ஒற்று ‘ப் போட்டு எழுதினால் ஒரு பொருளும் (meaning), ஒற்றுப் போடாமல் எழுதினால் வேறொரு பொருளும் வரும். சில சொற்களுக்கு அலங்கடைகளும் (exceptions) உண்டு.

ஆகவே ,                          

எழுத்துப் புணரியல் , வேற்றுமை , குற்றியலுகரம் , முற்றியலுகரம் , அலங்கடைகள் , குறுக்கம் , அல்வழித் தொகைச்சொல் , உரிச்சொல் , மரபு மற்றும் வழக்குத் தெரிந்தால் மட்டுமே “ஒற்று”ப் போட்டு எழுதுவதா வேண்டாமா என்று தெரியும்.

இவையெல்லாம் JUST CONCEPTS. அவ்வளவுதான். விதிகளாக அணுகி இலக்கணம் கற்பதைவிட ஒரு கருதுகோள்( CONCEPT / IDEA ) ஆக அணுகினால் மிக மிக எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

oreluthu orumozhi : தமிழ் இலக்கணம்

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

error:
Scroll to Top