நாலடியார் 71 : யாரிடம் சொல்லக்கூடாது

நாலடியார் 71

நாலடியார் 71 கோதை அருவிக் குளிர்வரை நன்னாட … பேதையோ டியாதும் உரையற்க – பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. ~ பூமாலை போலக் கொட்டும் அருவியின் காரணமாகக் குளிர்கின்ற மலைகளை உடைய மன்னா … முட்டாளோடு எதையும் சொல்லிவிடாதே .. எதைச் சொன்னாலும் முட்டாள் அதை வெளியில் மாற்றிச் சொல்லிவிடுவான் .. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே அதனினும் நன்று. நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Naaladiyar 71

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும்

kurunthogai 167

குறுந்தொகை 167 : கூடலூர்க் கிழார் முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே ~ புளித்த தயிரைப் பிசைந்த பொழுது காந்தள் மலர் போன்ற உன் மகளின் மெல்லிய விரல்கள் கலிங்க நாட்டின் கழுவாத கழுமரங்களைப் போல இருந்தன. குவளை மலர்களைப் போன்ற அவள் கண்கள் அடுப்புப்புகை பட்டு வருந்துகையிலும் …

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும் Read More »

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை ..

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றிமலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய்விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனாநிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே. தமிழ் இலக்கணத்தில் மெய் எழுத்துக்கு அரை மாத்திரை. அந்த அளவுக்குக் கூட மாத்திரை கிடைக்காமல் வயிற்றுப் போக்கால் [காலரா] பலர் இறந்து போயுள்ளனர். மனித மனதில் தோன்றும் மூன்று விதமான நோய்களை நீக்கும்  வல்லமை படைத்த தூய்மையானவரே , இந்நிலத்தில் மக்களுக்காக இருக்கும் சுப்ரமணியரே , பெருகும் இந்நோய் …

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை .. Read More »

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம்

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை 🙂 தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார் [ 1871 – 1931 ] , பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து “ஆய்த எழுத்தை” மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார். முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம். பயிற்சி 1: பயிற்சி 2: தமிழ் …

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம் Read More »

திருக்குறள் 398 : கல்வியின் பயன்

thirukkural 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து திருக்குறள் 398 திருக்குறள் 398 பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு பிறவிகளிலும் உயர்வு தரும். கல்வியின் பயன் குறித்துத் தொடர்ந்து பேசுவது தமிழ்ச்சான்றோர் பணி. கல்வி எவ்வாறு ஒருவருக்குத் துணை நிற்கும் என்று விளக்கும் மிக முக்கியமான இக்குறளில், கல்வியின் அருமையை மிக எளிமையாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர். இங்கு ஏழு பிறவியென்பது இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்வர் அறிஞர் …

திருக்குறள் 398 : கல்வியின் பயன் Read More »

error:
Scroll to Top