தமிழ்க்கடல் மீனாட்சி சுந்தரம்

தமிழ் இலக்கண இலக்கியம் மற்றும் சமய நூல்களில் புலமைமிக்கவராகவும் திருவாடுதுறை ஆதினத்தில் மாபெரும் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் ‘ திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ‘. இறையையும் தமிழையும் ஒன்றாகக் கருதி வாழ்ந்த தமிழறிஞர். தமிழ்ப்பற்று மிக்க மாணவர்களுக்கு நல்லாசிரியராகத் திகழ்ந்தவர்.

சாதிமத வேறுபாடின்றி மாணாக்கருக்குத் தமிழ்க்கல்வி அளித்ததோடு மட்டுமல்லாது உணவும் இடவசதியும் அளித்துவந்தார். இவரது மாணாக்கரில் ஒருவர்தாம் ‘ உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சுவாமிநாதர் ‘ என்கின்ற ‘ உ.வே.சா ‘. பின்னாட்களில் ‘ தமிழ்த்தாத்தா ‘ என்றழைக்கப்பட்ட மகாமகோபத்தியாய டாக்டர். உ.வே.சா.

ஆசிரியருக்கும் மாணாக்கருக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவாக இருந்தது. தமிழ்த்தாத்தா உ.வே.சா தமிழுக்கு ஆற்றிய அரும் பணியும் அவர்தம் வாழ்நாள் முழுவதும் தேடியலைந்து உரையெழுதிப் பதிப்பித்த சங்கத் தமிழிலக்கிய நூல்களும் இல்லையேல் இன்று நாம் நல்லபல தமிழ் இலக்கியங்களையே இழந்திருப்போம். அத்தகைய பெருமகனாரின் ஆசிரியரான ‘ திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ‘ பிறந்த நாள் ஏப்ரல் 6. ( ஏப்ரல் 6 ,1815 – ஃபெப்ருவரி 1, 1876 )

————————————————————————————————————————————————————————–

Tamil kadal Meenakshi sundaram pillai

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

————————————————————————————————————————————————————————–

error:
Scroll to Top